டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டி விட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3788 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதால், மொத்த எண்ணிக்கை 70 ஆயிரத்து 390 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 64 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததால், பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 365 ஆக அதிகரித்துள்ளது.
தேசிய அளவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 3.17 சதவீதமாக உள்ள நிலையில், டெல்லியில் 3.35 சதவீதமாக இருக்கிறது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ் ஆனதால், இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 41 ஆயிரத்தை கடந்துள்ளது.
தேசிய அளவிலான குணமடைவோரின் விகிதம் 56.71 சதவீதமாக உள்ள நிலையில், டெல்லியில் சற்று உயர்ந்து 58.8 சதவீதமாக இருக்கிறது. கொரோனா நோயாளிகளை கண்டறிய அனைத்து வீடுகளிலும் தெர்மல் பரிசோதனை நடத்தப்படும் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.