ஐக்கிய நாடுகள் சபையின் பொது சேவை தின கொண்டாட்டத்தின்போது, கொரோனா வைரஸை திறம்பட கையாண்டதற்காக கேரள அரசு கௌரவிக்கப்பட்டது.
வீடியோ கான்பிரன்சிங் வாயிலாக நடைபெற்ற இந்த விழாவில் ஐ.நாவின் பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் உள்ளிட்ட உயர்மட்ட பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.
திறம்பட செயல்பட்டு கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்திய, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா உள்ளிட்டோர் பாராட்டப்பட்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஷைலஜா, நிபா வைரஸ் மற்றும் 2018,2019-ல் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் ஆகியவற்றை கையாண்டதில், மாநில சுகாதாரத் துறைக்கு கிடைத்த அனுபவம் கொரோனா வைரஸை கையாள உதவியதாக தெரிவித்தார்.