உத்தர்கண்ட் மாநிலத்தில் ஒரு பாலம் நிலைகுலைந்து விழுந்ததில் அதில் சென்று கொண்டிருந்த லாரி வறண்ட ஆற்றில் விழுந்த வீடியோ வெளியாகியுள்ளது.
இந்திய - சீன எல்லையை ஒட்டிய பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பிதோர்கரில் இருந்து எல்லையை நோக்கிச் செல்லும் தாபா மிலம் சாலை வழியாக அதிக எடையுடன் கூடிய கட்டுமான எந்திரத்துடன் சென்ற கனரக லாரி வழியில் குறுக்கிட்ட பெய்லி பாலத்தைக் கடந்தது. அந்த லாரி பாலத்தின் பாதி வழியைக் கடந்த போது லாரியின் எடையை தாங்க முடியாமல் பாலம் உடைந்து விழுந்தது.
இந்த விபத்தில் லாரியின் ஓட்டுநரும் லாரிக்குப் பின்னால் சற்று தூரத்தில் பாலத்தில் நடந்து வந்த ஒருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.