பீகார் மாநிலத்தில்,இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையேயான எல்லையில், இந்திய பகுதிக்குள் உள்ள நதியின் கட்டுமான பணிகளை நிறுத்துமாறு நேபாள அதிகாரிகள் கூறியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பீகாரின் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் ஓடும் லால் பேக்கி (( Lal Bakey)) நதியின் கரை கட்டுமான பணிகளை பீகார் மாநில நீர்வத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். ஆனால் அந்த பகுதி தங்களுக்கு சொந்தமானது என கூறி நேபாள அதிகாரிகள் பணியை தடுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும், நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் பீகார் அரசு தகவல் அளித்துள்ளது.
இந்திய பகுதிகளை உள்ளடக்கிய நேபாளத்தின் புதிய அரசியல் வரைபடத்திற்கு அந்த நாட்டின் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கிய சில தினங்களில், இந்தியா உடனான சர்வதேச எல்லையில் பிரச்சனையை ஏற்படுத்தும் நேபாளத்தின் திட்டம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.