பொருத்தமற்ற உள்ளடக்கங்கள் இடம்பெறுவதால் இணையதொடர்களை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என, பிரதமர் மோடியிடம் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், இணைய தொடர்கள் வன்முறை, பாலியல் மற்றும் ஆபாசமான விஷயங்கள் போன்றவற்றை அதிகளவில் கொண்டிருப்பது, பார்வையாளர்களின் மனதை எதிர்மறையாக பாதிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இத்தகைய உள்ளடக்கத்தை ஒளிபரப்புவதால் ஏற்கனவே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான, குற்றங்கள் உள்ளிட்ட சமூக பிரச்சினைகள் உருவாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஆபாச வலைதளங்களுக்கு தடை விதிக்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.