சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவான மற்றும் குறைந்த தரம் கொண்ட பொருட்களின் விவரங்களை, தொழில்துறையிடம் இருந்து மத்திய அரசு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிழக்கு லடாக் பிரிவில் இருநாட்டு ராணுவத்திற்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, சீனாவுடனான பொருளாதார உறவை குறைக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், கை மற்றும் சுவர் கடிகாரங்கள், கண்ணாடி கம்பிகள் மற்றும் குழாய்கள், அழகு சாதன பொருட்கள் போன்றவை குறித்து அரசு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அச்சிடும் மை, வார்னீஷ் உள்ளிட்ட வண்ணப்பூச்சுகள் மற்றும் சில புகையிலை பொருட்களின் விவரங்களும் கேட்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.