பாகிஸ்தானில் இருந்து புதிய வெட்டுக்கிளி திரள் ஊடுருவி இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஸ்ரீகங்கநகர் மாவட்டத்தில் புகுந்துள்ள இந்த வெட்டுக்கிளி திரள் சுமார் 5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வெட்டுக்கிளிகளின் இனப்பெருக்கம் பிகானேர் மாவட்டத்தில் பதிவாகி உள்ளது. இதையடுத்து புதிய வெட்டுக்கிளி திரளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் வேளாண்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த பூச்சிக் கொல்லி மருந்துகளும், அதற்கான உபகரணங்களும் வாங்க ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மருந்துகளை பார்மர், ஜோத்பூர், ஜெய்சல்மார், அஜ்மீர், ஜெய்ப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.