சீனா தொடர்பான கொள்கையை இந்தியா மாற்றிக் கொள்ள வேண்டுமென்று இந்திய ராணுவ முன்னாள் தளபதி வி.பி. மாலிக் தெரிவித்துள்ளார்.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் ஹிந்தி பதிப்பான ஹிந்துஸ்தானுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், லடாக் மோதல் சம்பவம் ஒரு திருப்பு முனை என்றும், இதனால் சீனா தொடர்பான ராணுவ கொள்கையை மட்டுமல்லாது, பொருளாதாரம், அரசியல் ரீதியிலான கொள்கைகளையும் மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
போர் மூளும்பட்சத்தில், சீனா, பாகிஸ்தான் ஆகிய 2 நாடுகளுடன் ஒரே நேரத்தில் இருபக்கமும் சண்டையிடும் வலிமை இந்திய ராணுவத்துக்கு உள்ளதாக கூறிய அவர், இதனால் இந்திய ராணுவ திறன் குறித்து கவலைப்பட தேவையில்லை எனவும் குறிப்பிட்டார்.
மலைபகுதியில் போரிடுவதில் சீன ராணுவத்தை காட்டிலும் இந்திய ராணுவம் அதிக திறமைவாய்ந்தது எனவும் அவர் கூறினார்.