ரெம்டெசிவர் மருந்தை கோவிஃபார் (Covifor) என்ற பெயரில் இந்தியாவில் விற்க மருந்து நிறுவனமான ஹெட்டரோ (Hetero ) வுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைமை இயக்குநர் அனுமதி அளித்துள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள இந்த நிறுவனத்தின் தொழிற்சாலையில் இந்த மருந்து உற்பத்தி செய்யப்பட்டு, ஒரு வாரத்திற்குள் தயாராகி விடும் என ஹெட்டோரா நிறுவன தலைவர் பார்த்தசாரதி ரெட்டி தெரிவித்துள்ளார்.
இது அவசர சிகிச்சைக்கான மருந்து என்பதால், மருந்துகடைகளில் கிடைக்காது என்றும், கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு மட்டும் நேரடியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அபாய கட்டத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு இது நரம்பு ஊசியாக போடப்படும். உரிய மருத்துவ கண்காணிப்புடன், நோயாளியின் குடும்பத்தினரின் ஒப்புதலுடன் மட்டுமே இந்த மருந்து வழங்கப்படும். 100 மில்லி லிட்டர் ஊசி மருந்தின் விலை 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கும் என கூறப்படுகிறது.