டெல்லியில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிக்கான கட்டணம், பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் குறைக்கப்பட்டு உள்ளது, அங்கு தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், ஐசியுக்கள் மற்றும் சோதனைக் கருவிகளின் விகிதங்களை நிர்ணயிக்கும் நோக்கில், கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவின் பரிந்துரையின் பேரில், தனியார் மருத்துவமனைகளின் மொத்த படுக்கைகளில் 60 சதவீதம் வரை கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
மேலும், நாள் ஒன்றிற்கு தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளுக்கு 8 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலும், ஐசியு பிரிவுக்கு 13 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரையிலும் மற்றும் வென்டிலேட்டருடன் கூடிய ஐசியு பிரிவுக்கு 15 முதல் 18 ஆயிரம் ரூபாய் வரையிலும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.