கால்வனில் இந்திய - சீனப் படையினர் மோதலுக்குப் பிறகும், அப்பகுதியில் இந்திய ராணுவத்தின் பொறியாளர் குழு தொடர்ந்து பணியாற்றி ஒரு பாலத்தைக் கட்டி முடித்துள்ளது.
கால்வன் பள்ளத்தாக்கில் திங்கள் இரவில் இந்திய - சீனப் படையினரிடையே மூண்ட மோதலால் இந்தியப் படையினர் 20 பேர் வீரமரணமடைந்தனர். 19 பேர் காயமடைந்தனர். சீனாவிலும் பலர் உயிரிழந்ததாகவும் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையிலும் கால்வன் ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலப் பணிகளைத் தொடர்ந்து செய்யுமாறு ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் ராணுவப் பொறியாளர்களும், எல்லைச் சாலைகள் அமைப்பின் பொறியாளர்களும் தொடர்ந்து 72 மணி நேரம் பணியாற்றிப் பாலப் பணிகளை முடித்துள்ளனர். கால்வன் ஆற்றின் மீது 60 மீட்டர் நீளத்துக்குக் கட்டப்பட்டுள்ள இரும்புப் பாலம் அந்தப் பகுதியில் ராணுவ வாகனங்கள் சென்று வர வசதியாக இருக்கும்.