செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

ஒற்றை சோர்ஸால் 70 பேருக்குப் பரவிய கொரோனா... உயிர் பயத்தில் தவிக்கும் ஊரடங்கை மதிக்காத ஆந்திர கிராம மக்கள்!

Jun 20, 2020 01:40:54 PM

ரடங்கு உத்தரவை மதிக்காமல் சமூக இடைவெளியைக் காற்றில் பறக்கவிட்டுப் பிறந்த நாள் விழா,   நிச்சயதார்த்தம், திருமணம் என்று அடுத்தடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஆந்திர கிராம மக்கள்  இப்போது கொரோனாவிடம் சிக்கி அல்லாடி வருகின்றனர்.

ஆந்திரப் பிரதேச மாநிலம்  கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 'கொல்லாலா மாமிடாடா' என்ற  கிராமம் உள்ளது. காக்கிநாடாவிலிருந்து 24 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் இந்தக் கிராமத்தில்  சுமார் 19,000 பேர் வசிக்கிறார்கள். கொரோனா நோய்த் தொற்று பரவக்கூடாது என்று பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை இந்த கிராமத்தினர் சற்றும் சட்டை செய்யவில்லை. இதனால் கொரோனா இந்த கிராமத்தை தற்போது, ஆட்டுவித்து வருகிறது. 

ஜூன் 18 - ம் தேதி வரை கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 500 கொரோனா நோயாளிகள் இருந்தார்கள்.  இவர்களில் 208 பேர் கொல்லாலா மாமிடாடா கிராமத்துடன் நேரடியாகத்  தொடர்புடையவர்கள். இந்தக் கிராமத்தில் மட்டும் 118 பேர் இதுவரை நோய் தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார். அதில்,  30 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இருவர் பலியாகியிருக்கின்றனர். தற்போது கடுமையான ஊரடங்குக்கு இந்தக் கிராமம் உட்படுத்தப்பட்டிருக்கிறது. கடினமான ஊரடங்கு காரணமாக இந்தக் கிராமத்தில் தற்போது மயான அமைதி நிலவுகிறது.  சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. நூறு மீட்டருக்கு ஒரு போலீஸ் என கிராமமே தீவிர கண்காணிப்பில் உள்ளது.


கொரோனா தன் கோரப்பிடியை இந்தக் கிராமத்தில் இறுக்கிய பிறகு ஞானம் பெற்றிருக்கும் கிராம வாசிகள், " இப்போது வீட்டுக்குள்ளேயே பயந்து போய் முடங்கிக் கிடக்கிறோம். அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட வெளியே வருவதில்லை" என்கிறார்கள்.மே மாத மத்தியில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில்  சுமார் 60 கோரோனோ நோயாளிகளே பதிவாகியிருந்தார்கள். ஆனால், கொல்லாலா மாமிடாடா கிராமம் ஹாட்ஸ்பாட்டாக மாறிய பிறகு நோயாளிகள் எண்ணிக்கை 500 -ஐ தாண்டிவிட்டது- 

கொல்லாலா மாமிடாடா கிராமத்தில், 55 வயதுடைய கௌடா சத்யநாராயணா குடும்பத்துடன் வசித்துவந்தார். இவர் போட்டோகிராபர். கிராமத்தில்  உள்ள கணேஷ் டீக்கடையில் சத்யநாராயணாக தன்  நண்பர்களுடன் டீ அருந்துவது வழக்கம்.  மே 12 - ம் தேதி சத்யா நாராயணாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. 20 - ம் தேதி அவரது உடல்நிலை கவலைக்கிடமாக, காக்கிநாடா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோனார். அவருக்கு கோரோனோ நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கார் ஓட்டுநருக்கு நோய்த் தொற்று பரவியது. மேலும், சத்ய நாராயணனின் இரண்டு உறவினர்கள், அதைத் தொடர்ந்து அவரின் மனைவி, கல்லூரி படிக்கும்  மகன் ஆகியோருக்கும் நோய்த் தொற்று அடுத்தடுத்து பரவியது. அதன் பிறகு கணேஷ் டீ கடைக்குப் பால் வழங்கியவருக்கும் தொற்று  உறுதி செய்யப்பட்டது. கடந்த  மே மாதத்தில் இந்த கிராமத்தில் நடந்த பிறந்த நாள் விழா, பக்கத்து கிராமத்தில் நிச்சயதார்த்த விழாவுக்கும் குடும்பத்துடன் சத்யநாராயணா சென்று வந்திருக்கிறார். இத்துடன் இல்லாமல் இந்தக் கிராமத்தில் நடந்த திருமண விழா ஒன்றிலும் போட்டோ பிடிக்கும் வேலையிலும் ஈடுபட்டுள்ளார். விழிப்புணர்வு இல்லாமல் சென்ற இடம் எங்கும் கொரோனா நோய்த் தொற்று இவரால் பரவியிருக்கிறது. 


சத்யா  நாராயணா போட்டோ பிடித்த திருமண விழாவில் கலந்துகொண்டவர்கள், சத்யா நாராயணா இறப்புக்கு துக்கம் விசாரிக்க வந்தவர்களுக்கும்  நோய்த் தொற்று பரவியிருக்கிறது. கணேஷ் டீ கடையில் சத்ய நாராயணாவுடன் நேரடித் தொடர்பில் இருந்த ஏழு பேருக்கு கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் வந்திருக்கிறது. இவர்களிடமிருந்து மேலும் 15 பேருக்குத் தொற்று பரவியிருக்கிறது. சத்யநாராயணனிடமிருந்து மட்டும் சுமார் 70 பேருக்கு நோய்த் தோற்று பரவியிருக்கிறது என்கிறார்கள் மருத்துவ அதிகாரிகள்.

ஊரடங்கை  மதிக்காமல் திருமணம், நிச்சயதார்த்தம், பிறந்த நாள் விழா என்று கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கொல்லாலா மாமிடாடா கிராமமே இப்போது பெருந்துயரத்தில் சிக்கியுள்ளது. சமூக இடைவெளியைப் பின்பற்றி, நோய்த் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்வோம்!


Advertisement
மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல்... கடத்திச் செல்லப்பட்ட 3 பெண்கள், 3 குழந்தைகளைத் தேடும் பணி தீவிரம்
ஒடிசாவில் இருந்து கர்நாடகத்திற்கு 23 வன உயிரினங்களை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது
திருப்பதியில் வி.ஐ.பி.தரிசன டிக்கெட் வழங்கும் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் மையம் திறப்பு
இரவு முதல் தொடர் மழை - பல இடங்களில் பெருக்கெடுத்த தண்ணீர்..
வளர்ந்த இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் அதிகாரம் பெற வேண்டும் - பிரதமர் மோடி
பா.ஜ.க.வில் உள்ள கறைபடிந்த நபர்கள் மீது நடவடிக்கை - நிதின் கட்கரி வலியுறுத்தல்
பழங்குடியினர் இடையே மோதலை ஏற்படுத்துவதே காங்கிரஸ் கொள்கை - மோடி
பூட்டிய வீட்டின் தகரகூரையை துளைத்துக் கொண்டு வந்த தோட்டாவை போலீஸில் ஒப்படைப்பு..
சிம் கார்டே இல்லாமல் ஃபோன் பேசும் வசதி : பி.எஸ்.என்.எல் புதிய திட்டம்..
ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் 3ஆவது நாளாக நீடிக்கும் அமளி..

Advertisement
Posted Nov 14, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”


Advertisement