உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்துவிழுந்ததில் இடிபாடுகளின் உள்ளே பலர் சிக்கிக் கொண்டனர்.
நான்கு பெரிய சிமெண்ட் ஸ்லாப்கள் சரிந்து விழுந்ததில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மகிந்திரா மேக்ஸ் கார் ஒன்றும் பாலத்தின் கீழ் நசுங்கிக் கிடந்த காட்சிகள் சம்பவ இடத்தின் கோரத்தை விளக்குவதாக இருந்தன.
இடிபாடுகளில் மீட்கப்பட்ட சிலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் அப்பகுதியில் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.