செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

1960 - ல் சூஎன்லாய் கொடுத்த ஐடியா... மறுத்த நேரு... தொடரும் போராட்டம்! உண்மையை விளக்கும் வாஜ்பாய் உதவியாளர்

Jun 19, 2020 05:21:46 PM

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயியின் உதவியாளராகவும், பிரதமர் அலுவலகத்தின் இயக்குநராகவும் பணிபுரிந்தவர், சுதீந்திர குல்கர்னி. இவர் எழுதியிருக்கும் 'பைட்டிங் த புல்லட்’ (Biting the bullet) எனும் கட்டுரையில் பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மீது அடிக்கடி குற்றம் சுமத்துவதற்குப் பதில் 1962- ல்  சீனப் போர் உருவான விதத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சுதீந்திர குல்கர்னி எழுதியிருக்கும் கட்டுரையில்,''1960 - ம் ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் சீன மக்கள் குடியரசின் முதல் பிரதமரான சூ என்லாயின் இந்திய வருகை பற்றியும் அப்போது இந்தியா - சீனா இடையேயான உறவைத் மேம்படச்  செய்யும் விதமாக, எல்லைத் தகராறு குறித்து அவர் முன்வைத்த 'சாத்தியமான தீர்வு' பற்றியும் நினைவு கூர்ந்துள்ளார்.

 "சீனப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவரான மாவோ ஒப்புக்கொண்ட, இந்தியா - சீனா இடையே உள்ள எல்லைப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் விதத்தில் ஒப்பந்தம் ஒன்றை சூ என்லாய் முன்வைத்தார். இந்த ஒப்பந்தத்தின் படி, இந்தியா அக்சாய் சின் பகுதியில் சீனாவின் மேலாண்மையை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அருணாசலப் பிரதேசத்தில் இந்திய மேலாண்மையைச் சீனா ஏற்றுக்கொள்ளும். சீனா அருணாசலப் பிரதேசத்தை உரிமை கொண்டாடாது. இதற்கு அர்த்தம், மெக்மோஹன் கோடு வரையிலான நிலப்பகுதிகள் இந்தியாவின் அதிகார வரம்புக்கு உட்பட்டதாக இருக்கும். ஆனால், இந்த ஒப்பந்தத்தை நேரு நிராகரித்துவிட்டார்." என்று குல்கர்னி தன் கட்டுரையில் எழுதியிருக்கிறார்.

மேலும் அந்தக் கட்டுரையில் நேரு தனக்குத்தானே பயத்தில் கூறிக்கொண்டதாக  குல்கர்னி எழுதியிருப்பதாவது... "அக்சய் சின் பகுதியைச் சீனர்களிடம் கொடுத்துவிட்டால், அதற்குப் பிறகு நான் பிரதம மந்திரியாக இருக்க மாட்டேன். அதனால், இதற்கு நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்" என்றும் நேருவின் அச்சம் பற்றி குல்கர்னி குறிப்பிட்டுள்ளார். அதோடு, '' சூ  என்லாயின் ஒப்பந்தத்தை நேரு ஏற்றிருக்கும் பட்சத்தில் பொது மக்களை அவரால் நிச்சயம் சமாதானப்படுத்தியிருக்க முடியும். ஆனால், ஊடகங்கள் மற்றும் அடல் பிகாரி வாஜ்பாயி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் அக்சய்சின்னை  ஒப்படைப்பதைக் கடுமையாக எதிர்த்திருப்பார்கள் . சூழ்நிலை அடிப்படையில் சூ என்லாயின்  சமாதானத்தை நேரு ஏற்றுக்கொண்டிருந்தால், 'இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான எல்லைப் பிரச்னை பேச்சுவார்த்தைகள் மூலம் நிரந்தரமாகத் தீர்க்கப்பட்டிருக்கும். 1962 - ம் ஆண்டு நடந்த போரும் தடுக்கப்பட்டிருக்கும்.   LAC பகுதிகளில் மீண்டும் மீண்டும் சண்டைகள் நடந்திருக்காது. தற்போதைய கைகலப்பும் நடந்திருக்காது. 1960 - ல் அந்த ஒப்பந்தம் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால் இந்தியாவின் ஜம்மு - காஷ்மீர் மீதான இறையாண்மையையும் சீனா ஏற்றுக்கொண்டிருக்கும்.

அதனால், இந்தியப் பிரதமர் மோடி அரசியல் சந்தை பற்றிக் கவலைப்படாமல்,  டிரம்ப் உள்ளிட்டோரை நம்பாமல் பொது மக்களிடம் கருத்துக் கேட்டு சீனாவுடனான சமரசம் சார்ந்த மாற்றத்திற்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டை உறுதிப்படுத்தப்பட்ட எல்லைக் கோடாக மாற்ற வேண்டும்" என்றும் குல்கர்னி அந்தக் கட்டுரையில் எழுதியிருக்கிறார்.


Advertisement
மக்களால் 80, 90 முறை நிராகரிக்கப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்த முயற்சி - பிரதமர் மோடி
தொடர்ந்து ரத்து செய்யப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள்..
குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது..
நானும் என்.சி.சி. மாணவர் தான் - பிரதமர் மோடி பெருமிதம்..
மராத்தா பெருமையை கையில் எடுத்த பா.ஜ.க.. திருப்புமுனை தந்த அன்பு சகோதரிகள் திட்டம்.. ஆட்சியை தக்க வைத்த மகாயுதி கூட்டணி
வெடித்துச் சிதறியது காதலியின் கைகள்..! தோழிக்கு ஹேர்டிரையர் வெடிகுண்டு பார்சலில் அனுப்பி வைத்தது ஏன் ? வில்லங்கம் வீடு தேடி வந்த பின்னணி
அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..
கேரளாவுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட இருந்த 850 கிலோ குட்கா பறிமுதல் 8 பேர் கைது
பிப்ரவரி மாத தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் கிடைக்கும் தேதிகள்
எஸ்.பி.ஐ.வங்கி கிளையில் கேஸ் கட்டர் மூலம் வெட்டி 19 கிலோ தங்க நகைகள் கொள்ளை என தகவல்

Advertisement
Posted Nov 25, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

விடிய விடிய 6 பீர் குடித்தாரம்.. பலியான 27 வயது பெண்..! லாட்ஜில் நடந்தது என்ன? 60 வயது நண்பரிடம் விசாரணை

Posted Nov 25, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

கார் - 80 சவரன் நகைக்காக 10 வருட காதலுக்கு பை பை..! ஜிம் மாஸ்டருக்கு லாக் அப்..!

Posted Nov 24, 2024 in இந்தியா,அரசியல்,Big Stories,

மராத்தா பெருமையை கையில் எடுத்த பா.ஜ.க.. திருப்புமுனை தந்த அன்பு சகோதரிகள் திட்டம்.. ஆட்சியை தக்க வைத்த மகாயுதி கூட்டணி

Posted Nov 24, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆளுக்கொரு ஆட்டம்.. ஐயப்ப சாமியை இசைவாணி இழிவுபடுத்தினாரா ? போலீசில் பரபரப்பு புகார்

Posted Nov 24, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

வெடித்துச் சிதறியது காதலியின் கைகள்..! தோழிக்கு ஹேர்டிரையர் வெடிகுண்டு பார்சலில் அனுப்பி வைத்தது ஏன் ? வில்லங்கம் வீடு தேடி வந்த பின்னணி


Advertisement