செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

ராஜீவ் அவதாரத்தில் ராகுல் காந்தி... அரசியலில் பலனளிக்குமா?

Jun 19, 2020 03:43:11 PM

இந்தியாவின் சிறந்த அரசியல் கட்சித் தலைவராக வருவார் என்று கருதப்பட்ட நிலையில், ராகுல்காந்தி அரசியலில் தகிடுதத்தம் போடும் நிலையில்தான் உள்ளார்.கடந்த 2014- ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. அதற்கு பிறகு , தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சிக்கு தோல்விதான் கிடைத்து வருகிறது. எப்போதுமில்லாத அளவுக்கு ராகுல் காந்தி காலக்கட்டத்தில்தான் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது.  பாரதிய ஜனதா கட்சி அல்லது அதன் கூட்டணி கட்சிகள் இந்தியாவில் அதிகபட்சமாக 19 மாநிலங்களில் ஆட்சி செய்து வந்தது . காங்கிரஸ் கட்சி வெறும் 6 மாநிலங்களில்தான் ஆட்சியில் இருந்தது.

அதுமட்டுமல்லாமல், பாரதிய ஜனதா கட்சி மிக வலுவான கட்சியாக மாறியது ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த காலக்கட்டத்தில்தான். தற்போது , மக்களவையில் 303 எம்.பிக்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு உள்ளனர். மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு 52 எம்.பிக்கள்தான் உள்ளனர்.ராஜ்யசபாவிலும் பாரதிய ஜனதா கட்சிக்கே அதிக உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத தோல்வியை தழுவியதால், கட்சித் தலைவர் பதவியையும் ராகுல் காந்தி துறந்தார்.

காங்கிரஸ் கட்சியின் தற்காலிகத் தலைவராக சோனியா காந்தி இருக்கிறார். கட்சித் தலைவர் பதவியை துறந்தாலும், ராகுல் காந்தி ஆக்டிவான அரசியல்வாதியாகவே வலம் வருகிறார். இதற்கிடையே, தன் தோற்றத்தையும் தந்தை ராஜீவ்காந்தி ஸ்டைலுக்கு மாற்றியுள்ளார். ராஜீவ் காந்தி போலவே ஹேர்ஸ்டைலையும் மாற்றியிருக்கிறார். இதனால், ராகுலை பார்க்கும் போது,அவரின் தந்தை ராஜீவ்  காந்தியை பார்ப்பது போலவே இருக்கிறது. ராகுல் காந்தியின் புதிய கெட்டப் அரசியலில் எந்தளவுக்கு பலனளிக்குமென்று தெரியவில்லை.

இதற்கிடையே , கால்வனில் இந்திய வீரர்கள் சீன வீரர்களால் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, ராகுல் காந்தி தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வருகிறார். ராகுல் காந்தியின் கருத்துக்கு பதிலளித்துள்ள பாரதிய ஜனதா கட்சி, 'இந்திய அரசியல் வரலாற்றிலேயே இவ்வளவு முதிர்ச்சியற்ற அரசியல் தலைவரை பார்த்ததில்லை 'என்று கடுமையாக விமர்சித்துள்ளது.


Advertisement
மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல்... கடத்திச் செல்லப்பட்ட 3 பெண்கள், 3 குழந்தைகளைத் தேடும் பணி தீவிரம்
ஒடிசாவில் இருந்து கர்நாடகத்திற்கு 23 வன உயிரினங்களை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது
திருப்பதியில் வி.ஐ.பி.தரிசன டிக்கெட் வழங்கும் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் மையம் திறப்பு
இரவு முதல் தொடர் மழை - பல இடங்களில் பெருக்கெடுத்த தண்ணீர்..
வளர்ந்த இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் அதிகாரம் பெற வேண்டும் - பிரதமர் மோடி
பா.ஜ.க.வில் உள்ள கறைபடிந்த நபர்கள் மீது நடவடிக்கை - நிதின் கட்கரி வலியுறுத்தல்
பழங்குடியினர் இடையே மோதலை ஏற்படுத்துவதே காங்கிரஸ் கொள்கை - மோடி
பூட்டிய வீட்டின் தகரகூரையை துளைத்துக் கொண்டு வந்த தோட்டாவை போலீஸில் ஒப்படைப்பு..
சிம் கார்டே இல்லாமல் ஃபோன் பேசும் வசதி : பி.எஸ்.என்.எல் புதிய திட்டம்..
ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் 3ஆவது நாளாக நீடிக்கும் அமளி..

Advertisement
Posted Nov 15, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”


Advertisement