திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய 3000 பக்தர்களை கூடுதலாக அனுமதிக்க தேவதஸ்தானம் முடிவுசெய்துள்ளது. திருப்பதியில் கடந்த 11ம் தேதி முதல் ஏழுமலையான் கோவிலுக்குள் தரிசனம் செய்ய பொது பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
300 ரூபாய் சிறப்பு தரிசன வரிசையில் மூவாயிரம் பக்தர்களும்,இலவச தரிசன வரிசையில் மூவாயிரம் பக்தர்களும், விஐபி தரிசன வரிசையில் 750 பக்தர்களும் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், கூடுதலாக 3 ஆயிரம் பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் 300 ரூபாய் தரிசன டிக்கெட் வினியோகம் செய்யப்படவுள்ளது. இதன் காரணமாக நாளொன்றுக்கு 9,750 பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள் என தேவாஸ்தானம் அறிவித்துள்ளது.