இந்திய வீரர் ஒருவர் கொல்லப்பட்டால் எதிரிப்படையை சேர்ந்த மூவரை கொல்லுமாறு, ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என பஞ்சாப் முதலமைச்சர் அம்ரேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
கால்வான் பகுதியில் இந்திய-சீன ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக பேசியவர், தான் ஒரு அரசியல்வாதியாக பேசவில்லை எனவும், ராணுவத்தில் இருந்தவன் மற்றும் அதன் மீது அன்பு கொண்டவன் எனும் விதத்தில், இந்திய ராணுவம் மீதான தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என கூறுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கொடூரமான தாக்குதலுக்கு அரசாங்கத்திடமிருந்து பொருத்தமான பதிலை, ஒட்டுமொத்த தேசமும் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.