டெல்லியில் அமைச்சர் சத்தியேந்தர் ஜெயின் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவரிடம் இருந்த நலவாழ்வுத்துறையின் பொறுப்பைத் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஏற்றுக்கொண்டுள்ளார்.
டெல்லி நலவாழ்வுத்துறை அமைச்சர் சத்தியேந்தர் ஜெயினுக்கு கொரோனா தொற்று இருப்பது புதனன்று தெரியவந்தது. மருத்துவமனையில் அவருக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.
அது மட்டுமல்லாமல் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் அதீசி, முதலமைச்சரின் ஆலோசகர் அக்சய் மராத்தே, துணை முதலமைச்சரின் ஆலோசகர் அனிந்திதா மாத்தூர் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சத்தியேந்தர் ஜெயினிடம் இருந்த நலவாழ்வுத்துறை உள்ளிட்ட துறைகளின் பொறுப்பைத் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஏற்றுக்கொண்டுள்ளார். .