கொரோனா பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிய வேண்டியதன் தேவையை வலியுறுத்திக் கர்நாடகத்தில் இன்று முகக்கவசம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
கொரோனா தொற்றுள்ளோரிடம் இருந்து தும்மும்போதும் இருமும்போதும் கிருமிகள் வெளியாகிக் காற்றில் கலப்பதைத் தடுக்கவும், தொற்று இல்லாதோருக்கு மூக்கு, வாய் ஆகியவற்றின் வழியாகக் கிருமி உட்புகுவதைத் தடுக்கவும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என உலக நலவாழ்வு நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
வீட்டைவிட்டு வெளியே வந்தாலே முகக்கவசம் அணிவது இந்தியாவில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முகக்கவசம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தக் கர்நாடகத்தில் இன்று முகக்கவச நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி பெங்களூரில் சட்டமன்றத்தின் அருகே முதலமைச்சர் எடியூரப்பா, அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் முகக்கவசம் அணிந்தபடி நடந்து சென்றனர்.