இந்தியாவை குறிவைத்து சைபர் தாக்குதல்களில் சீனா ஈடுபட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கல்வான் பள்ளத்தாக்கில் நேரிட்ட மோதலில் நேரிட்ட உயிரிழப்பால் பதற்றம் நிலவுகிறது. இந்த சூழ்நிலையில், இந்தியாவை சேர்ந்த அரசு இணையதளங்கள், ஏடிஎம்முடன் தொடர்புடைய வங்கி அமைப்பு ஆகியவற்றை குறிவைத்து செவ்வாய், புதன்கிழமையன்று சீனாவிலிருந்து சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத் தலைநகர் செங்குடு பகுதியில் இருந்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் பெரும்பாலானவை தோல்வியில் முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்குடுவில் சீன ராணுவ மக்கள் விடுதலைப்படையிலுள்ள ஒரு பிரிவின் தலைமையகம் உள்ளது. சீன அரசு ஆதரவுடன் செயல்படும் ஹேக்கர்களும் அங்கே அதிகம் உள்ளனர். இதனால் சீன ராணுவ பின்னணி இதில் இருக்கும் என உறுதியாக நம்புவதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.