இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்தை தாண்டிய நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 237ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா கண்டறியப்பட்டு வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 12 ஆயிரத்து 881 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 334 பேர் பலியாகியுள்ளனர்.
இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்து 946ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 12 ஆயிரத்து 237ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் மருத்துவமனைகளில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 384 பேர் சிகிச்சை பெறும் நிலையில், இதுவரை சிகிச்சையில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 325 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 16 ஆயிரத்து 752ஆகவும் பலியானோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 651ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்து 193ஆகவும், டெல்லியில் 47 ஆயிரத்து 102ஆகவும், குஜராத்தில் 25 ஆயிரத்து 93ஆகவும் உயர்ந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 598ஆக உள்ள நிலையில், ராஜஸ்தானில் 13 ஆயிரத்து 542ஆகவும், மேற்கு வங்கத்தில் 12 ஆயிரத்து 300ஆகவும், மத்திய பிரதேசத்தில் 11 ஆயிரத்து 244ஆகவும் அதிகரித்துள்ளது.
ஹரியானாவில் 8 ஆயிரத்தை தாண்டிய நிலையில், கர்நாடகா மற்றும் ஆந்திராவில் 7 ஆயிரத்தையும், பீகாரில் 6 ஆயிரத்தையும், தெலுங்கானா, ஜம்மு காஷ்மீரில் 5 ஆயிரத்தையும் கடந்துள்ளது.