கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, 15 மாநில மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
21 மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்களுடன், வீடியோ கான்பிரன்சிங் வயிலாக பிரதமர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது, ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படுவதாகவும், இது தொடர்ந்து முன்னேறிச் செல்ல ஊக்கமளிப்பதாக இருப்பதாகவும் கூறினார்.
மேலும், கொரோனாவுக்கு எதிரான போராட்டம், ஒத்துழைப்பான கூட்டாட்சி முறைக்கு நல்ல உதாரணம் எனவும், மத்திய, மாநில அரசுகள் இணைந்து போராடுவதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் டெல்லி போன்ற 15 மாநில மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.