தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக அடுத்த இரு தினங்களில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு பருவமழை, மேற்கு மற்றும் கிழக்கு மத்தியப்பிரதேசத்தின் பல பகுதிகள் மற்றும் கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் மேலும் பல பகுதிகளில் முன்னேறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பருவமழையின் வடஎல்லை, கண்டலா, அகமதாபாத், இந்தூர் வழியாகச் செல்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் வடக்கு வங்கக் கடலுக்கு மேற்பகுதியிலும், அண்டைப் பகுதிகளிலும் புதிய காற்றழுத்த தாழ்வுமண்டலம் இம்மாதம் 19-ம் தேதி உருவாகக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.