மருத்துவ தேவை தவிர பிற மாவட்டங்களில் இருந்து புதுச்சேரி வருபவர்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்படுவார்கள் எனவும் இ பாஸ் வைத்திருந்தாலும் மாநில அரசின் அனுமதி இன்றி சென்னையிலிருந்து வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வருபவர்களால் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.