பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணத்தில் எவ்வித சந்தேகத்துக்கும் இடமில்லை என மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாந்த்ரா இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சுஷாந்தின் உடற்கூறு ஆய்வில், தூக்கில் தொங்கியதால் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டது. அதே போல் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தஅவர் அதற்கென சிகிச்சை பெற்றதாகவும் கூறப்பட்டது.
இதனிடையே சுஷாந்த் தொழில் போட்டியில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ள, மராட்டிய உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ட்விட்டரில் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் தான் மும்பை போலீசார் சுஷாந்த் மரணத்தில் சந்தேகத்துக்கு இடமில்லை என தெரிவித்துள்ளனர். இதுவரை கோரேகன் பகுதியில் வசிக்கும் சுஷாந்தின் சகோதரி, நண்பர் மகேஷ் ஷெட்டி, நடிகை ரியா சக்ரபர்த்தி, மேலாளர்கள், சமையலர் உட்பட 6 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.