ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனையின் போது நடைபெறும் மோசடிகள் குறித்து சிபிஐ மாநில அரசுகளை எச்சரித்துள்ளது.
மெத்தனால் கலந்த போலியான சானிட்டைசர்கள் குறித்தும் சிபிஐ எச்சரித்துள்ளது.
இன்டர்போல் போலீசாரின் தகவலின் பேரில் வெளிநாட்டில் இயங்கும் சில நிறுவனங்கள் தங்கள் பொருட்களுக்கு முன்பணம் செலுத்த விளம்பரங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுகின்றன. இவை பெரும்பாலும் போலி நிறுவனங்கள். பலர் முன்பணம் கட்டியபின்னர் மோசடி என்பது தெரிய வருகிறது. அந்த போலி நிறுவனங்கள் ஆர்டர் செய்த எந்தப் பொருளையும் டெலிவரி செய்வதே இல்லை. இதே போல் போலியான சானிட்டைசர்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் சானிட்டைசர்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் மெத்தனால் கலந்த போலி சானிட்டைசர்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. மெத்தனால் மனித சருமத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியது என்றும் சுகாதார அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்தும் சிபிஐ மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை செய்துள்ளது.