கேரளாவில் கொரோனா தொற்று காலத்தில் குறுகிய காலத்துக்கு வந்து செல்லும் பயணிகளுக்கான புதிய வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கேரளாவில் நேற்று புதிதாக 82 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2 ஆயிரத்து 500 ஐ தாண்டியுள்ளது.
மீண்டும் நோய்த் தொற்று தீவிரம் அடைந்து விடாதிருக்க கேரள அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி வளைகுடா நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு சான்றிதழ் அவசியம் என்பது போன்ற கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இ பாஸ்கள் வழங்குவது மிகவும் தாமதமாவதால் இந்த நடவடிக்கை பலருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதே போன்று கேரளாவில் நீண்ட காலம் வசிக்க வரும் வெளிமாநிலத்தவர்களுக்கு ஒருவார காலம் தனிமைப்படுத்துதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. குறுகிய காலப் பயணிகள் தாங்கள் குறிப்பிடும் நபர்களைத் தவிர்த்து இதர பயணிகளை சந்திப்பதோ பொது இடங்களில் நடமாடுவதையோ தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.