நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் 20 ஆயிரம் கூடுதல் படுக்கைகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு தனது ஊழியர்களுக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
தலைநகரில் தாண்டவமாடும் கொரோனா தொற்று காரணமாக சிறு மற்றும் நடுத்தர மருத்துவமனைகள் கொரோனா சிறப்பு வார்டுகளாக மாற்றப்படும் என முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்தார்.
ஆனால் மற்ற நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்று டெல்லி மருத்துவர் சங்கம் வலியுறுத்தியதால், கெஜ்ரிவால் தனது உத்தரவைத் திரும்பப் பெற்றார். இதையடுத்து 20 ஆயிரம் கூடுதல் படுக்கைகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு அரசு ஊழியர்களுக்கு அவர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதி அளிக்க சுமார் 40 ஹோட்டல்களும் 80 விருந்து அரங்குகளும் சுகாதார வசதி மிக்க மையங்களாக மாற்றப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.