சூரிய கிரகணத்தை ஒட்டி வரும் 21ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவில் பதிமூன்றரை மணிநேரம் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி மூலம் பக்தர்களிடம் குறைகளை கேட்கும் நிகழ்ச்சியில், தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், 21-ந்தேதி நிகழும் சூரிய கிரகணம் அன்று காலை 10.18 மணிக்கு தொடங்கி மதியம் 1.38 மணிக்கு முடிவதாகக் கூறினார்.
ஆகையால், 21-ந்தேதி நள்ளிரவு 1 மணிக்கே கோவிலின் நடை அடைக்கப்பட்டு மதியம் 2.30 மணிக்கு திறக்கப்படும் எனவும், ஆகையால் அந்த சமயத்தில் பக்தர்களுக்கான ஸ்வாமி தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.