இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையே, வரும் 22ம் தேதி வீடியோ கான்பிரன்சிங் வாயிலாக ஆலோனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் முயற்சியின் பேரில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் இந்த கூட்டத்தில், கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்பை சமாளிக்க, நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
அதேசமயம், இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்சனையில் மூன்றாம் நபரின் தலையீடு வேண்டாம் என இருநாடுகளும் வலியுறுத்தி இருப்பதால், இக்கூட்டத்தில் எல்லை பிரச்சனை தொடர்பாக விவாதிக்கப்படாது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.