கொரோனா தொற்றை குணப்படுத்த ஆயுர்வேத மருந்தை உருவாக்கியுள்ளதாக, பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆச்சார்யா பால்கிருஷ்ணா, விஞ்ஞானிகள் குழுவைக் கொண்டு தங்கள் நிறுவனம் உருவாக்கியுள்ள மருந்தைக் கொண்டு, 5 முதல் 14 நாட்களுக்குள் கொரோனா நோயாளிகளை குணப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.
மேலும், 100-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு அந்த மருந்தை வழங்கி மேற்கொண்ட சோதனையில், 100 சதவிகிதம் சாதகமான முடிவுகள் கிடைத்ததாகவும், ஒரு வாரத்திற்குள் ஆய்வுகள் தொடர்பான ஆதாரங்கள் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.