நாடு முழுவதும் ஒரே நாளில் 11 ஆயிரத்து 458 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 10 ஆயிரத்தைத் தாண்டி விட்டது. அதேபோல, கொரோனா உயிர்ப்பலி, 9 ஆயிரத்தை நெருங்குகிறது.
அதிவேக பாய்ச்சல் காட்டும் கொரோனாவால் பாதிப்பும், உயிர்ப்பலியும் ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருகிறது.
மஹாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி, புதிய பாய்ச்சல் காட்டி உள்ளது.
தமிழகம், இந்த பட்டியலில் 2- வது இடம் வகிக்கிறது.
டெல்லியில் கொரோனா பாதிப்பு 37 ஆயிரத்தை நெருங்க, குஜராத்தில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 22 ஆயிரத்து 500 - ஐ தாண்டி விட்டது.
ராஜஸ்தானில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், ஹரியானா, கர்நாடகா, ஆந்திரா தெலங்கானா மற்றும் கேரளா என பல்வேறு மாநிலங்களிலும் வைரஸ் தொற்று பாதிப்பு, கணிசமாக உயர்ந்து வருகிறது.
நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சத்து 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்,
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7 ஆயிரத்து 135 பேர் கொரோனாவின் பிடியில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.
எனவே, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 54 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
இதற்கிடையே, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 10 ஆயிரத்தை தாண்டி விட்டது.
அதேபோல, வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கி வருவதாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.