ஆந்திராவில், தரமற்றப் பேருந்துகளைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், தெலுங்கு தேசக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பிரபாகர் ரெட்டியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அசோக் லேலண்ட் நிறுவனத்தில் கழிக்கப்பட்ட பிஎஸ்-3 தரங்கொண்ட 103 பேருந்துகளை வாங்கிய பிரபாகர் ரெட்டி அவற்றைப் புதுப்பித்துத் தனது திவாகர் டிராவல்ஸ் நிறுவனத்தில் வணிக முறையில் பயன்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஆந்திரச் சாலைப் போக்குவரத்து ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் எம்எல்ஏ பிரபாகர், அவர் மகன், கூட்டாளிகள் உள்ளிட்டோர் மீது 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, எழுபதுக்கு மேற்பட்ட பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் அனந்தப்பூரில் பிரபாகர் ரெட்டி, அவர் மகன் அஸ்மித் ஆகியோரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.