துபாயில் இருந்து மும்பைக்கு கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளை வருவாய் உளவுத்துறை இயக்குனரக அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இவற்றின் மதிப்பு 12 கோடி ரூபாயாகும் .பேரீச்சைப் பழப் பெட்டிகளில் அடைக்கப்பட்ட இந்த சிகரெட்டுகளின் கார்ட்டூன்களை கடத்தி வந்த மணிஷ் சர்மா மற்றும் சுனில் லட்சுமண் ஆகிய இரண்டு பேரை அதிகாரிகள் கைது செய்தனர். 32 ஆயிரத்துக்கும் அதிகமான கார்ட்டூன்களில் சுமார் 72 லட்சம் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
போலியான நிறுவனங்களின் பெயரில் இந்த சரக்குகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 80 நாள் ஊரடங்கு காரணமாக வெளிநாட்டு சிகரெட் புகைப்போருக்கு சரக்குகள் கிடைப்பதில் தட்டுப்பாடு நீடிப்பதால் அதிக விலைக்கு விற்பனை செய்ய இவை கடத்தி வரப்பட்டன.இதுகுறித்த ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து அதிகாரிகள் சோதனை நடத்தியதில் இவை சிக்கியுள்ளன.