நேபாளத்தின் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டியிருக்கும் நேபாள பிரதமர் சர்மா ஒளி, இந்திய பகுதிகளை உள்ளடக்கிய சர்ச்சைக்குரிய புதிய வரைபடம் தொடர்பான மசோதாவுக்கு இன்று வாக்கெடுப்பு நடத்த உள்ளார்.
இதனிடையே நேபாள எல்லையருகில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர். இந்திய விவசாயிகள் சிலர் நேபாள எல்லையை தாண்டியதாக கூறி வானத்தில் 15 ரவுண்டு துப்பாக்கிச் சூடு நடத்திய நேபாள போலீசார் விவசாயிகளை நோக்கி சுட்டது.
எல்லையருகில் நேபாளம் தனது படை பலத்தையும அதிகரித்து வருகிறது. இதனால் இந்திய நேபாள எல்லையில் பதற்றம் உருவானது. எல்லை வரையறை தொடர்பாக இருநாடுகளிடையே கருத்து மோதல் வெடித்திருந்த நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.