முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜூன கார்கே, பாஜகவின் அசோக் காஸ்தி, இரானா கடாடி ஆகியோர் கர்நாடக மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்குப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மதசார்பற்ற ஜனதா தளத்தின் நிறுவனத் தலைவரான தேவகவுடா தமது கட்சியின் எம்பியான ஹரிபிரசாத்தின் பதவிக்காலம் ஜூன் 25ம் தேதி நிறைவு பெறுவதை ஒட்டி அந்த இடத்துக்கு போட்டியிட்டார்.
87 வயதான தேவகவுடாவின் கட்சிக்கு 34 உறுப்பினர்களே உள்ள நிலையில் அவர் தேர்வு பெற 44 பேரின் ஆதரவு தேவைப்பட்டது. இந்நிலையில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் அவருக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்ததால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதே போன்று காங்கிரஸ், பாஜக தலைவர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.