தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் இருந்து 63 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களுக்கான கோரிக்கை வந்துள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின் படி 15 நாட்களுக்குள் அனைத்து புலம் பெயர் தொழிலாளர்களும் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளதால்,மாநிலங்களின் ரயில் தேவை குறித்து ரயில்வே வாரியம் கடிதம் அனுப்பியது.
அதில் தமிழகம் 10 ரயில்களை இயக்க கோரிக்கை விடுத்துள்ளது. கேரள அரசு 32 ரயில்களை விடுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் 9 ரயில்களுக்கும், கர்நாடகா 6 ரயில்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த 63 ரயில்களில் 23ரயில்களை மேற்கு வங்கத்திற்கு இயக்க மாநில அரசுகள் கேட்டுக் கொண்டதாகவும் ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.