டெல்லியில் கொரோனா நோயாளிகள், விலங்குகளை விடவும் மோசமாக நடத்தப்படுகின்றனர் என உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடி உள்ளது.
டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா நிலவரம் குறித்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. இது குறித்து நடந்த விசாரணையில் டெல்லியில் கொரோனா நோயாளியின் உடல் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது குறித்து நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
டெல்லியில் கொரோனா நிலைமை கொடூரமாகவும், அச்சம் விளைவிப்பதாகவும் அதே சமயம் பரிதாபமாக இருப்பதாகவும் டெல்லி அரசு மீது கடும் கண்டனங்களை முன்வைத்தனர்.சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டல்களை டெல்லி அரசு பின்பற்றவில்லை என்ற நீதிபதிகள் சோதனையை 7 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக குறைத்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர்.