பாரத ஸ்டேட் வங்கி, எஸ்பிஐ லைஃப் நிறுவனத்தில் அதற்குள்ள பங்குகளில் ஒருபகுதியை விற்று ஆயிரத்து 523 கோடி ரூபாய் திரட்டத் திட்டமிட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி இயக்குநர் அவையின் செயற்குழுக் கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. அதில் பாரத ஸ்டேட் வங்கிக்கு எஸ்பிஐ லைஃப் நிறுவனத்தில் உள்ள பங்குகளில் 2 புள்ளி ஒரு விழுக்காடு அதாவது 2 கோடியே 10 லட்சம் பங்குகளை விற்க முடிவெடுக்கப்பட்டது.
ஒரு பங்கு 725 ரூபாய் என்கிற விலையில் விற்று மொத்தம் ஆயிரத்து 523 கோடி ரூபாய் திரட்டத் திட்டமிட்டுள்ளது. செபி விதிமுறைகளின்படி எஸ்பிஐ லைஃபில் பாரத ஸ்டேட் வங்கிக்கு உள்ள பங்குகளை 25 விழுக்காடாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதால் 2 புள்ளி ஒரு விழுக்காடு பங்குகளை விற்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.