கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்தாலும் நாட்டில் சமுதாய தொற்று ஏற்படவில்லை என ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் என்பதால் இப்போது காணப்படும் தொற்று எண்ணிக்கை குறைவானதே என்று ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் பலராம் பார்கவா தெரிவித்துள்ளார். வைரஸ் தொற்று அதிவேகத்தில் பரவாமல் தடுக்க அரசு தக்க சமயத்தில் அறிவித்த ஊரடங்கு உதவியதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 15 மாவட்டங்களில் சுமார் பூஜ்யம் புள்ளி 73 சதவிகிதம் பேருக்கு ஊரடங்கிற்கு முந்தைய கால தொற்று ஏற்பட்டதை ஐசிஎம்ஆர் கண்டுபிடித்துள்ளதாகவும், ஊரடங்கால் மின்னல் வேக பரவல் தடுக்கப்பட்டது என்பதை இது காட்டுவதாவும் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.