ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பை உருவாக்குவதே தற்போது மிக அவசியமானது என்று சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், வேளாண்மை, கைத்தறி போன்ற துறைகளிலும், பின்தங்கிய நிலையில் இருக்கும் இடங்களிலும் வேலைவாய்ப்பை உருவாக்க ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான உடல் காப்பு கவசங்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்து வந்த நிலை மாறி, தற்போது இந்திய நிறுவனங்கள் மூலம் நாளொன்றுக்கு 5 லட்சம் உபகரணங்கள் உற்பத்தி செய்யப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு, மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியுஷ்கோயலிடம் அனுமதி கேட்டிருப்பதாகவும் தெரிவித்தார். சானிடைசர்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆர்டர்களையும் உள்நாட்டு நிறுவனங்கள் பெற்றுள்ளன என்றும் கட்காரி குறிப்பிட்டார்.