கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ரோக்சி குளோரோகுயின் ((Hydroxychloroquine)) மருந்து, இந்தியாவில் தேவைக்கு அதிகமாகவே உற்பத்தி செய்யப்படுகிறது என்று மத்திய ரசாயன மற்றும் உரத்துறை இணையமைச்சர் மன்சுக் மாண்டவியா ((Mansukh Mandaviya)) தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், கொரோனா பரவத் தொடங்கியபோது இந்தியாவில் அந்த மருந்து தயாரிப்பு கூடங்கள் 2 என்ற எண்ணிக்கையிலேயே இருந்ததாகவும், ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை 12ஆக அதிகரித்து விட்டதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவின் தற்போது நாள்தோறும் ஒன்றரை கோடி ஹைட்ரோக்சி குளோரோகுயின் மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது எனவும், இது இந்தியாவின் தேவையை காட்டிலும் அதிகம் எனவும், ஆதலால்தான் ஏற்றுமதி தடை விலக்கிக் கொள்ளப்பட்டது எனவும் அவர் கூறினார். 20 சதவீத மருந்தை உள்நாட்டு சந்தையில் விற்க கூறியிருப்பதால், மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டார்.