காஷ்மீர் மாணவர்கள் 1,600 பேருக்கு பாகிஸ்தானில் தொழில்கல்வி (professional courses) பயில இம்ரான் கான் அரசு உதவித் தொகை அளிக்க முன்வந்திருப்பது குறித்து, இந்திய அரசுக்கு பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
பாகிஸ்தானிலும், அதன் ஆக்கிரமிப்பு பகுதியிலும் காஷ்மீரை சேர்ந்த 150 பேர் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட கல்வி பயிலலாம் என போலீசார் மதிப்பீடு செய்துள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அரசால் முன்வைக்கப்பட்டுள்ள கல்வி உதவித் தொகை திட்டத்தை சுட்டிக்காட்டி, காஷ்மீர் இளைஞர்கள் இடையே பயங்கரவாதத்தை பரப்பும் மிகப்பெரிய திட்டத்தின் ஒரு பகுதி இது எனவும், பாகிஸ்தான் மீது அனுதாபம் கொண்டோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் எனவும் பாதுகாப்பு அமைப்புகள் எச்சரித்துள்ளன.
வாகா-அட்டாரி எல்லை வழியே பாகிஸ்தானுக்கு கல்விக் கற்க சென்று, எல்லை வழியே பயங்கரவாதிகளாக திரும்பி வந்தோர்களையும் சுட்டிக்காட்டியுள்ளன.