எல்கேஜி முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தக்கூடாது என கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், எல்கேஜி, யுகேஜி போன்ற வகுப்புகளுக்கும் பல தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பு நடத்துவதாக பெற்றோர்கள் மாநில அரசிடம் புகார் அளித்தனர்.
இது குறித்து பெங்களூரு மன நல மருத்துவ மையமான நிம்ஹான்ஸ் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் இதை தெரிவித்த பள்ளக்கல்வித் துறை அமைச்சர் சுரேஷ் குமார், ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில் கட்டணம் எதுவும் வசூலிக்கக்கூடாது என தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.