மகாராஷ்டிர மாநிலம் புனேயில் 47 கோடி ரூபாய் மதிப்புடைய வெளிநாட்டு கரன்சி மற்றும் ரூபாய் கள்ளநோட்டுகள், 3 லட்சம் ரூபாய் மதிப்புடைய உண்மையான ரூபாய் நோட்டுகள், கைத்துப்பாக்கி, போலி ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக ஒரு ராணுவ வீரர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராணுவ உளவுத்துறையினரும் புனே போலீசாரும் இணைந்து நடத்திய சோதனையில் விமன் நகரில் உள்ள மாளிகை ஒன்றில் பணத்தை பதுக்கி வைத்திருந்த கும்பல் சிக்கியது.
உண்மையான கரன்சி நோட்டுகளை வாங்கி இரட்டிப்பு மதிப்பில் போலி நோட்டுகளை தரும் கும்பல் இந்த பணத்தை பதுக்கி வைத்திருந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் போலி நோட்டுகளுடன் காலாவதியான பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் சிக்கியுள்ளன.