அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு வந்த போது , டெல்லியே கலவரத்தால் பற்றி எரிந்தது. குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிரான போராட்டம், ஆதரவான போராட்டம் என்று இரு தரப்பினரும் மோதிக்கொண்டதில் டெல்லியில் கலவரம் பற்றிக் கொண்டது இந்தக் கலவரத்தில் சுமார் 40 - க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 400- க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்த நிலையில், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க் டெல்லி கவரத்தின் போது வெளியான வீடியோக்களை வகுப்பு வாதம், வெறுப்புப் பேச்சு, இனவெறிக்கு எதிராக மேற்கோள் காட்டி பேசியிருப்பது பெரும் விவாதப் பொருளாகியிருக்கிறது.
மார்க் சக்கர்பர்க் தனது பேஸ்புக் நிறுவனத்தின் 25,000 ஊழியர்களிடம் வீடியோ கான்பரன்ஸ் முறையில் உரையாற்றினார். அப்போது, '' ஜார்ஜ் ஃபியாயிடு காவலர் ஒருவரால் கொல்லப்பட்ட போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சர்ச்சைக்குரிய கருத்துகளை பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். ஃபேஸ்புக் அதை ஏன் நீக்கவில்லை என்பது பற்றி தன் ஊழியர்களிடம் விளக்கினார். பேஸ்புக் நிறுவனத்தின் கொள்கைகள் குறித்தும் பேசினார். வெறுப்புப் பேச்சு, வகுப்புவாதம் குறித்து அவர் பேசிய போது, "இந்தியாவில் ஒரு சில சம்பவங்கள் இதுபோன்று நடைபெற்றிருக்கின்றன. 'காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால், எங்களது ஆதரவாளர்கள் நடவடிக்கை எடுத்து தெருவிலிருந்து அனைவரையும் அகற்றுவார்கள்' என்று ஒருசிலர் பேசினர். இது போன்ற வன்முறைப் பேச்சுக்களால் வன்முறையை ஊக்கப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு நாம் முன்மாதிரியாகத் திகழ வேண்டும்" என்று தெரிவித்தார்.
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக பிப்ரவரி 23 - ம் தேதி டெல்லி, மிஜாபூர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின் பொது பாஜக தலைவர் கபில் மிஸ்ரா, "மூன்று நாள்களில் தெருக்களில் கூடியிருப்போரை அகற்ற வேண்டும் என்று இறுதி எச்சரிக்கை விடுத்தார். இந்தப் பேச்சை மேற்கோள் காட்டியே, கபில் மிஷ்ராவின் பெயரைக் குறிப்பிடாமல் மார்க் சக்கர்பர்க் பேசியிருக்கிறார் என்று பலர் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
மார்க் சக்கர்பர்க்கின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துஅறிவுஜீவிகள் மற்றும் கல்வியாளர்கள் குழுமம் (Group of Intellectuals and Academicians - GIA) என்ற பெயர் கொண்ட வழக்கறிஞர்கள் குழு திறந்த மடல் ஒன்றை எழுதியிருக்கிறார்கள். அந்தக் கடிதத்தில்
, "திரு.சக்கர்பர்க், தாங்கள் பொறுப்பான மனிதர் என்பதற்காக நாங்கள் உங்களைப் பாராட்டுகிறோம். எங்களது GIA அமைப்பின் உண்மை கண்டறியும் குழுவினர் டெல்லி கலவரத்தின் போது களத்துக்கே சென்று விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் கிடைத்த தகவல்களை உங்களுக்குப் பகிர்ந்துகொள்கிறோம். டெல்லியில் டிசம்பர், 2019 - லிருந்தே வகுப்புவாத வன்முறை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது. டிசம்பர் 1 6 முதல் 20- க்குள் கிழக்கு மற்றும் தெற்கு டெல்லியில் மட்டும் குடியுரிமைக்கு எதிராகப் போராடியவர்கள் வன்முறையில் ஈடுபட்டதற்காக மீது 13 வழக்குகள் பதியப்பட்டிருக்கிறது.
Letter to Mark Zukerberg
Group of Intellectuals and academicians from India write an open letter
भारत के जाने माने इंटेलक्चुल और बौद्धिक लोगों के समूह ने लिखा मार्क जुकरबर्ग को पत्रhttps://twitter.com/
இதில் கிழக்கு டெல்லியில் மட்டுமே 7 வழக்குகள் பதிவாகியிருக்கிறது. இந்த வன்முறை நிகழ்வுகள் அனைத்தும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராகப் போராடியவர்களால் நிகழ்த்தப்பட்டது. சாலை எண் 66 - GT சாலை சந்திப்பு, வாஜிராபாத் சாலை ஆகிய பகுதிகளில் தாங்கள் குறிப்பிட்ட வன்முறை நிகழ்வுகள் பிப்ரவரி 23 -ந் தேதி நிகழ்ந்தது. இந்த இடம் தான் ஜாப்ராபாத். தங்களது கூற்று உண்மை மற்றும் தரவுகளின் அடிப்படையில் மட்டுமே தான் இருக்க வேண்டுமே ஒழிய வார்த்தை ஜாலங்களால் இருக்கக் கூடாது. நாங்கள் உங்களுக்கு உண்மைத் தரவுகளை அளிக்கிறோம். குறித்துக்கொள்ளுங்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தை ட்விட்டரில் பகிர்ந்து மார்க் சக்கர்பர்க்குக்கு தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார், கபில் மிஸ்ரா.
மார்க் சக்கர்பைர்க்கின் பேச்சால், டெல்லி கலவரம் மீண்டும் விவாதப் பொருளாகியிருக்கிறது!