மத்திய அரசின் பல அமைச்சகங்களிலும், துறைகளிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர் துறையில் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டல்களை அரசு பிறப்பித்துள்ளது.
அதன்படி, வைரஸ் தொற்று அறிகுறி இல்லாத ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வர வேண்டும். கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறு பணியாற்றினால் போதுமானது.
அலுவலகங்களில் ஒரு நாளில் 20 க்கும் மிகாமல் ஊழியர்கள் இருக்குமாறு அலுவல்கள் ஒதுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊழியர்கள் அனைவரும முகவுறையும் முக கவசமும் அணிந்திருக்க வேண்டும்.
இதை மீறும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அலுவலர்கள் நேருக்கு நேரான சந்திப்புகளை தவிர்த்து விட்டு தொலைபேசி அல்லது வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக அலுவல் காரியங்களை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.