உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவிலுக்கான கட்டுமானப் பணி, சிறப்பு பூஜைகளுடன் நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள சர்ச்சைக்கு உட்பட்டிருந்த நிலத்தில், ராமர் கோவில் கட்ட கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. தொடர்ந்து, ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர டிரஸ்ட் என்ற பெயரில், 15 உறுப்பினர்கள் அடங்கிய அறக்கட்டளை ஒன்று அமைக்கப்பட்டது. இதையடுத்து, ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மார்ச் மாதம் நடந்த நிலையில், ஊரடங்கு காரணமாக கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், அங்குள்ள குபேர திலா கோவிலில் சிவனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, நாளை கட்டுமான பணிகள் தொடரும் என கோவில் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.