கொரோனா நிலவரத்தின் பின்னணியில் அனைத்து 10 ஆம் வகுப்பு மாணவர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது.
ஐதராபாத்தில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையில் நடந்த உயர் மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படும் நிலையில், உள்மதிப்பீட்டுத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர் என கூறப்படுகிறது.
இந்த ஆண்டு துவங்கிய 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 5,34,903 மாணவர்கள் எழுதினர். இரண்டு பாடங்களுக்கு 3 தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தவின்படி தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.