பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பயணம் செய்வதற்கு என்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இரண்டு போயிங் விமானங்கள் செப்டம்பர் மாதம் இந்தியா வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2018 ல் ஏர் இந்தியாவால் வாங்கப்பட்ட இந்த B-777 விமானங்கள் டெல்லாசில் உள்ள போயிங்கின் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, உள்கட்டமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.
அமெரிக்காவிடம் இருந்து சுமார் 1500 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்ட அதி நவீன எவுகணை எதிர்ப்பு தளவாடங்கள் இந்த விமானங்களில் பொருத்தப்படுகின்றன.
ஆபத்து காலகட்டங்களில் தலைவர்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு வசதி கொண்ட அறைகளும் இந்த விமானங்களில் அமைக்கப்படுகிறது.
இந்தியா வந்த பின் இந்த 2 விமானங்களும் விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டு, தலைவர்களின் பயணங்களின் போது போர் விமானிகள் அவற்றை இயக்குவார்கள் என கூறப்படுகிறது.